மருதமுனை ஊடகப் பேரவையின் ஏற்பாட்டில் "நினைந்து பேசுதல்" பீ.எம்.எம்.ஏ.காதர் மீதான ஓராண்டு நினைவுகள் நிகழ்வொன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நாளை (13.01.2025) திங்கள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பேரவையின் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துறை இருக்கைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, தமிழ்துறை விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் ஆகியோர் சிறப்புரையாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
தினகரன், வார மஞ்சரிகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், தினகரன் கட்டுரை ஆசிரியர் எஸ். பாண்டியன், வீரகேசரி உதவி செய்தி ஆசிரியர் ஜே.ஜி. ஸ்டீன்,
விடிவெள்ளி ஆசிரியர் எம்.பீ.எம்.பைறூஸ், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவராசா, ஒருவன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் க.குணராசா, உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் ஆகியோரும் விஷேட பேச்சாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்
மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் விரிவுரையாளர் எப்.எம்.அகமது அன்சார் மௌலானா உட்பட பேரவையின் உறுப்பினர்களும் உரையாற்றவுள்ளதுடன் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெவுள்ளன.
ஊடகவியலாளரும் பிறை எப்.எம்.அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.ஷினாஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கவுள்ளார்.
மர்ஹும் பீ.எம்.எம்.ஏ.காதரின் குடும்ப உறுப்பினர் ஏற்புரையுடன் நிறைவுபெறவுள்ள இந்நிகழ்வில் வரையறுக்கப்பட்ட தலைப்புகளில் நேர ஒதுக்குதல்களுடன் உரைகள் இடம்பெவுள்ளன.
காதரின் ஊடகப் பணிகளை எதிர்கால சந்ததியினருக்கு அடையாளப்படுத்தும் நோக்கில் ஊடகப் பணிக்கான கௌரப் பட்டமொன்றும் வழங்கப்பவுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் ஊடகப்பேரவையின் பேரவையின் பொதுச் செயலாளருமான ஜெஸ்மி எம்.மூஸா தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours