நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இடங்களில் அமையப்பெற்றிருக்கும் உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் முதலானவற்றில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான ஏ. வாசித் அஹமட், ஏ.எல்.எம். அஸ்லம், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது முறையான அனுமதி பத்திரம் இன்றி உணவு கையாளுதல், உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமை, வியாபார சான்றிதழ் இன்மை, பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வகைகள் போன்ற முறையற்ற செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அத்துடன் இந்த திடீர் பரிசோதனையின் போது ஏழு உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு இருந்த பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, முறையான வியாபார அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளாத வியாபார நிலையங்களை குறித்த அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் வரை மூடி வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours