( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவில் 1984 இல் பிறந்து 40வது அகவையை பூர்த்தி செய்யும் நண்பர்கள்  ஒன்றிணைந்து அமைப்பொன்றை உருவாக்கி ஒன்று கூடலையும் ஆசிரியர் கௌரவிப்பையும்  சிறப்பாக நடத்தினார்கள் .

காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் பி.சிவதர்சன் தலைமையில் இந் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார் .

மேலும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
 
நிகழ்வில் உறுப்பினர்கள் அவர்களது பிள்ளைகளது கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
இவ்வாண்டில் பிறந்த  23 நண்பர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கின்றார்கள் .அவர்களது படங்கள் பொறித்த பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டது.
கடந்த கால சேவைகள் தொடர்பான காணொளி காண்பிக்க பட்டது.
அதிதிகள் உரையினை மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா, அதிபர் ம.சுந்தரராஜன் ஆகியோர் நிகழ்த்தினர்.

செயலாளர் கணேசன் மதனன் இந்த ஒழுங்குகளை மேற்கொண்டு வரவேற்புரை நிகழ்த்தி இருந்தார் .
உறுப்பினர் கே.மதியழகன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளிக்க 
உறுப்பினர் எழில்வேணி நன்றியுரையாற்றினார்.

இறுதியாக விருந்துபச்சாரம் நடைபெற்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours