எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது   தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர்  எம் சோமசூரியம் தலைமையில் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) திகதி இடம் பெற்றது.

2025 ஆண்டு  தொழில் நுட்ப கல்லூரியின் கற்கை நெறிகளை பயில்வதற்கு புதிய  மாணவர்களை  உள்வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.

உயர் தொழில்நுட்பத்தினாளான  கருவிகள் மற்றும் இயந்திரங்கள்  மூலம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் நுட்பத்தினை கற்பதற்கான வழிவகைகளை கல்லூரியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நவீன உலகில் புதிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் புதிய தொழில் முயற்சியாளராக உருவாக்குவதற்கும் மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லூரியானது பல வருடங்களாக சேவையை வழங்கி வருகின்றது.

இதன் போது  கற்கைகள் தொடர்பான விளக்கங்கள் புதிய மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விழுமியங்கள்  மற்றும் சட்ட திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் இதன் போது அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.

 மாவட்டத்தில் உள்ள  இளைஞர்  . யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான 24 வகையான தொழிற்றுறையில் அறிவை மேம்படுத்தி புதிய விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை வழங்கும் நிறுவனமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது  கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி, அருட்பணி பிறைணர் செலர்,
அம் ஐ அப்துல் கபூர்(மதானி) கலந்து சிறப்பித்ததுடன்
பிரதம அதிதியாக தேசபந்து செல்வராசா கலந்து கொண்டதுடன் கல்லூரியின் உப அதிபர் ஜே.நமோதினி, தொழிற்துறை பகுதித் தலைவர் எஸ் சிவராஜ்,
 எந்திரவியல் பகுதித் தலைவர் எஸ்உமேஸ்காந், வர்த்தகம் பகுதித் தலைவர் ஏ. சதானந்தம், பதிவாளர் ரீ.கங்கேஸ்வரன், விரிவுரையாளர்கள், மற்றும்  பெற்றோர்கள்மாணவர்கள்என பலர் கலந்து
கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours