சா.நடனசபேசன்
வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர் வளநிலையத்தின் ஏற்பாட்டில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயமும் பழையமாணவர் சங்கத்தினரினதும் ஒழுங்கமைப்பில் தைப்பொங்கல் விழா அதிபர் கே.தியாகராசா தலைமையில் வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வேப்பையடி இராணுவமுகாம் 2 ஆம் கட்டளைத்தளபதி மேஜர் கலாக்கோண் அல்சிராஜ் மகாவித்தியாலய அதிபர் அமீருள் கக் அன்னமலை 2 கிரமஉத்தியோகத்தர் ரி.தர்சினி உட்பட பலர் கலந்துசிறப்பித்ததுடன் சகோதர இனமாணவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்ததுடன் இந்நிகழ்வினை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இதழியல் டிப்ளோமா மாணவன் பா.ஜனுராஜ் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours