( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச சபையின் விபுலானந்த கலாச்சார மண்டபத்தின் மேற்தளத் திறப்பு விழா இன்று (16) வியாழக்கிழமை சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 உள்ளுராட்சி உதவி நன்கொடை நிதியுதவியில் 5 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அந்த அழகிய மண்டபத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி. ஆணையாளர் கமல் நெத்மினி திறந்து வைத்து கலந்து  சிறப்பித்தார் .

அதிதிகளாக கல்முனை கட்டிடங்கள் திணைக்கள  திட்ட பொறியாளர் பி. அச்சுதன் , காரைதீவு பிரதேச  செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் கலந்து சிறப்பித்தார்கள்.

விழாவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேச சபையின் ஆலோசனை குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அதிதிகளுக்கும் கட்டட ஒப்பந்ததாரர் திரு.குமாருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

திறப்பு விழாவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.சசிக்குமார் எம்.இஸ்மாயில் எஸ்.நேசராசா எம்.றனீஸ்  மற்றும் உள்ளூராட்சி ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours