நூருல் ஹுதா உமர்



இறக்காமம் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், இறக்காமம் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஜெசிந்தன் உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் விடுதிகள் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கும் விஜயம் செய்து பார்வையிட்ட பணிப்பாளர் வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டதுடன் அத்தியாவசிய தேவைகளை உடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் பணிப்பாளர் உறுதியளித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours