கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இணைய கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய நிறுவனங்கள் கலந்துரையாடியதுடன் கட்டண அதிகரிப்புக்களை மேற்கொள்ளவில்லை என எழுத்துமூலமான கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours