மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக சிரஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் நேற்றைய தினம் (11) திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்விற்கு வளவாளர்களாக பிரபல சட்டத்தரணி எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி, சம்மேளனத்தின் ஆலோசகர் வீ.கமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்தனர்.

சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு நிறைவுற்றதும், சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் புதிய தலைவராக பலத்த போட்டிக்கு மத்தியில் வாக்கெடுப்பின் மூலம் சிரேஷ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய உதயகுமார் உதயகாந்த் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தலைவராக தேர்வு செய்ப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்மேளனத்தின் புதிய செயலாளராக துரைராஜா லெட்சுமிகாந்தன் ஏகமனதாக சபையோரினால் தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு பொருளாளராக ஆயுள்வேத வைத்தியர் சபாரெத்தினம் சுதர்சன், உபதலைவராக எம்.வை.ஆதம்,  உபசெயலாளராக அருனாசலம் செல்வேந்திரன் ஆகியோரும், நிருவாக சபை உறுப்பினர்களாக இ.கோமலேஸ்வரி, கே.சதீஸ்க்குமார், ரீ.தயானந்தம், கே.தவராசா, கே.நடேசன், எம்.எஸ்.எம்.எம்.அகமட் லெவ்வை, திருமதி.கே.தவப்பிரகாசம், எம்.பகிதரன், எம்.எஸ்.எம்.நசீர், கே.தங்கராசா, ஈ.சீதாராமன், அகமட் சின்னலெவ்வை, என்.நவதாசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு புதிய  தலைவரின் உரை மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்கள் என்பன இடம் பெற்றதனைத் தொடர்ந்து செயலாளரின் நன்றியுரையுடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours