( காரைதீவு சகா)
மட்டக்களப்பு
ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் தைப்பொங்கல் விழா
கொண்டாட்டம் மல்வத்தை நடா- வசந்தி தம்பதியினரின் இல்லத்தில் நேற்று
சிறப்பாக இடம்பெற்றது.
அணித் தலைவரும் , ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில்
நடைபெற்றது.
முன்னதாக கொட்டும் மழைக்கு மத்தியில் புலன அணியினர் பொங்கல் வழிபாட்டிற்காக பளவெளி ஆதி சிவன் ஆலயத்திற்கு விஜயம் செய்தார்கள்.
அங்கு பூஜை வழிபாடுகளின் பின்னர் புதிர் எடுக்கும் நிகழ்வுக்காக வயலுக்கு சென்றனர்.
பின்னர் நடா- வசந்தி தம்பதியினரின் இல்லத்தில் பொங்கல் ஒன்று கூடல் நடைபெற்றது. விருந்துபசாரமும் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours