அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் தற்போது 106.6 அடி ஆக உயர்ந்துள்ளது.  அதன்படி, இன்று, 19.01.2025, காலை 8.00 மணிக்கு 5 வான் கதவுகளின் 6 அங்குலம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுமார் 12 அங்குலம் அல்லது ஒரு அடி திறக்க வேண்டும்.  அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருங்கள்.  காவல்துறையினரிடம் பேசி, வெள்ளம் சூழக்கூடிய சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கவும்.எனஅம்பாரை.அரசாங்க அதிபர்தெரிவித்துள்ளார்

 எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours