திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நலீன் பண்டார வழிமொழிந்தார். அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே, கௌரவ சந்தன சூரியஆரச்சி, கௌரவ எஸ். எம். மரிக்கார் மற்றும் கௌரவ (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours