(எம்.என்.எம்.அப்ராஸ்) 

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துரித நடடிக்கையினால் கல்முனை கடற்கரைப் சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு தடுப்புக்கற்கள் இடும் பணி நேற்று(02)இடம்பெற்றது.

கல்முனை கடற்கரை சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு மேலும் உக்கிரமடைந்த நிலையில் அங்கு உள்ள சுவர்கள் கடலரிப்பின் காரணமாக மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. கடலரிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கல்முனை சிறுவர் பூங்கா பாதிப்புகுள்ளாகும் நிலை காணப்பட்டது இதற்கமைய குறித்த பகுதி பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை கடற்கரை சிறுவர் பூங்காவின் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். இதன் போது நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவழைத்து,மக்களால் முன்வைக்கப்பட்ட மேற் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை மேற்கொண்டார் இதன் போது கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளினால் தடுப்பு கற்க்கள் இடும் பணிகள் உடனடியாக மேற் கொள்ளப்பட்டது .


மிக நீணடகாலமாக சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் மக்களுக்கு பயன் உள்ள வகையில் இதனை ஏற் படுத்தி தருமாறு மேலும் இதன் போது பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனையடுத்து கடற்கரைப் சிறுவர் பூங்கா சுற்று சூழலினை பாராளுமன்ற உறுப்பினர் அவதானித்ததுடன் பூங்காவின் ஒரு பகுதியில் வளர்ந்து காணப்படும் புற்கள் மற்றும் ஒளிரமாமல் காணப்படும் மின் குமிழ்கள் இதர அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாஅறிவுறுத்தினார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours