(எஸ்.அஷ்ரப்கான்)

கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகள் 2025/01/11,12,13,14 ஆம் திகதிகளில் 14, 16, 20 வயது கபடி அணிகளுக்கிடையே போட்டிகள் யாவும் கேகாலை வித்தியாலயம் மற்றும் கேகாலை சென்ட் ஜோசப் மகளிர் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இப்போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று அணிகளும் வெற்றி வாகை சூடி, பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர். 

இதில் 16 வயதுப் பிரிவு அணியினர்  "கோல்ட் மெடல்" பெற்றதோடு, 14 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவு இரு அணிகளும் "பிரவுன் மெடல்" பெற்றுள்ளனர்.

மேலும் 16 வயது பிரிவில் பெஸ்ட் பிளேயர் அவாட் விருதை மாணவன் ஏ.ஆர்.முஹம்மட் அன்ஸக் பெற்றார். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு 
மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்று வழிப்படுத்திய பிரதம கபடி பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எஸ்.எம்.இஸ்மத்,  அர்பணிப்புடன்
செயற்பட்ட சிரேஷ்ட கபடி வீரர்களான கே.எம்.நாபீஸ், எம்.எச்.அபாத், ஏ.ஆர்.ஏ.ஜுமான், எம்.எச்.எம்.சத்தார், எஸ்.எம்.ஸபிஹான் மற்றும் ஏ.சமீன் உட்பட ஆசிரியர்களான ஏ.ஹலீம் அஹமத், எம்.ஐ.எம்.அஸ்மி ஆகியோருக்கும் மாணவர்களின்  பெற்றோர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும்
வழிகாட்டலையும் ஆலோசனைகளை வழங்கிய எங்கள் பாடசாலை முதல்வர் ஏ.அப்துல் கபூர்,  இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கும்
அல்-அஷ்ரக் பாடசாலை சமூகம்  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours