பாறுக் ஷிஹான்
பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழு பங்களிப்புடன் பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.கோகுல்ராஜ் வருகை தந்து வரவேற்புரையுடன் இச்செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் இருந்து சுமார் 50 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது செயலமர்வானது மத்தியஸ்த சபை உத்தியோகத்தர்களான அருள் பிரசாந்தன் எஸ்.றிஸ்மினா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இச்செயலமர்வானது மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மினா ஏனைய மத்தியஸ்த உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
இதன் போது பாடசாலை மத்தியஸ்தம் மத்தியஸ்த வரலாறு முரண்பாடு முரண்பாட்டு தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாடல் கலந்துரையாடல் மத்தியஸ்த படிமுறைகள் பாடசாலை மத்தியஸ்தத்தில் ஆசிரியர்களின் பங்கு என்பன ஆசிரியர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours