எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இந்திய அரசின் உலர் உணவுப் போதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

 இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும் எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வேண்டு கொளுக்கு அமைவாக   750  உலர் உணவுப் போதிகள்  இன்று மாவட்ட செயலத்திற்கு வந்தடைந்துள்ளது.


இவ் பெறுமதியான உலர் உணவு போதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  
 மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், கணக்காளர்  எம் வினோத்  மற்றும் பலர் கலந்து கொன்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours