துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவ வைத்தியர் இராசேந்திரன் சாஸ்வதா அவர்கள் கடந்த 10.01.2025 தொடக்கம் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியேற்றுள்ளார்.
இவர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ துறையில் பட்டத்தினை
பெற்றுள்ளதோடு, இந்திய அரசின் புலமை பரிசில் மூலம் இந்தியா தமிழ்நாட்டில்
டாக்டர் எம். ஜி.ஆர் அரச மருத்துவ பல்கலைக்கழகத்தில் "சித்த மருத்துவ
பேரறிஞர்" என்ற பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
தற்போது
கொழும்பு பல்கலைக்கழகம்-- இலங்கையின் மருத்துவ சபை சான்றிதழைப்
பெறுவதற்காக (வைத்திய கலாநிதி) ஒரு சிரேஷ்ட பதிவாளராக ஆயுர்வேத ஆதார
வைத்தியசாலை, கப்பல் துறை, திருகோணமலையில் இரண்டு வருட ஆய்வுக் கற்கை
நெறியினை மேற்கொண்டும் வருகின்றார்.
மேலும்
இவர் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுடன்,
துறைநீலாவணை 07ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதி கல்வி
பணிப்பாளர் .இராசேந்திரன், யோகராணி தம்பதியினரின்
புதல்வியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours