நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸானின் தலைமையில் இடம்பெற்றது.


இந்த ஒன்றுகூடலில் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் கலாசார மத்திய நிலையத்தின் தொழிற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்தி குழுவினருக்கு விளக்கினார். இந்த கலாசார மத்திய நிலையத்தின் தலைவராக மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸானும், செயலாளராக மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் அஸ்வான் மௌலானாவும், உபதலைவராக சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ரப், உப செயலாளராக அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரும், பொருளாளராக பதவி வழியில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் விரிவுரையாளரும், கணக்கு பரிசோதகராக கலைஞர் எம். மாஹிர் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக 06 கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அபிவிருத்தி முகாமைத்துவ குழுவினர் தொடர்ந்தும் கலாசார மத்திய நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பளீல், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours