நூருல் ஹுதா உமர்பாறுக் ஷிஹான்
சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டு பூர்த்தி : "நிர்வாக சேவை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைவும், கௌரவிப்பும்"
நூருல் ஹுதா உமர்
சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற "நிர்வாக சேவை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைவும், கௌரவிப்பும்" திங்கட்கிழமை நிந்தவூர் தோம்புகண்டம் விடுதியில் நடைபெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் தலைவர் ரியாத் ஏ மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், பதவி உயர்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், சமூர்த்தி உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் நினைவு சின்னங்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கெளரவ அதிதியாக போக்குவரத்து நெடுச்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீஸன் அவர்களும், என்.எம்.இன்ஜினியரிங் கோன்சல்டன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.யூ.எம் நியாஸ் அவர்களும் சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
படுகொலை செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம் பழீல் அவர்களின் நினைவாக பழீல் அரங்கத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் அரசாங்க அதிபராக, அமைச்சுக்களின் செயலாளர்களாக, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக, அரச திணைக்களங்களின் தலைவர்களாக, பிரதேச செயலாளர்களாக இன்னும் பல உயர்பதவிகளை அலங்கரித்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பத்தி எழுத்தாளர்களாக, பிராந்திய செய்தியாளர்களாக சிறப்பாக பணியாற்றும் சிலோன் மீடியா போரத்தின் 12 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு கீ டெக் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

Post A Comment:
0 comments so far,add yours