பாறுக் ஷிஹான்
வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் இருந்து சட்டவிரோத கசிப்பு சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் இடிப்படையில் சுட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12,000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 57 வயதுடைய சந்தேக நபரையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கைதான வீரமுனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இது தவிர கடந்த சில தினங்களுக்கு மன்னர் சம்மாந்துறை பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் இவ்வாறு மல்வத்தை பகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தின் 24வது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குச் சென்று இராணுவ அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரிகள் அம்மக்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours