( வி.ரி.சகாதேவராஜா)


 அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது .

கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000 ரூபாவிற்கு இன்று விற்கப்பட்டது.

சந்தையில் இந்த விலை என்றால் கிராமங்களில் உள்ள சில்லறைக் கடைகளில் நிலைமை வேறு. கிலோ 2400 வரை விற்கப்படுகிறது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் என்று மில்லாதவாறு அதிகரித்து வருகின்றன.

நேற்றையதினம் பிரதான சந்தையில் சில மரக்கறிகளின் விலைகள் இவை.

மிளகாய்  -2000
பெ.வெங்காயம்-240
சி.வெங்காயம்-400
உ.கிழங்கு(வெ)-250
உ.கிழங்கு (சி)(நுவரேலி)-550
லீக்ஸ்-700
கரட் (நுவரேலியா)-1000
கரட் - 900
தக்காளி - 200
கோவா- 700
இஞ்சி -2000
வெ.பூண்டு- 700
வோஞ்சி-300
தேசிக்காய்-150
பீட்ரூட்-600
சுரைக்காய் -200
கத்தரிக்காய்- 800
வெண்டிக்காய்-600
பயற்றை - 600
பழப்புளி- 1400

இவ்வாறு பரவலாக விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் மக்கள் திருப்தியாக உண்டு வாழ்வதற்கு திண்டாடுகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours