எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

 07.02.2025 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.முதல் நிகழ்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு நெற் கதிர், பொங்கல் பொருட்கள் என்பன  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சூடடித்தல்,  நெல் குற்றுதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. புது அரிசி கொண்டு பிரதான பொங்கல் பானை செய்யப்பட்டது, ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு வகையான பொங்கல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலை நிகழ்வுகளின் வரிசையில் நிருவாக உத்தியோகத்தரினால் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளரினால் தலைமை உரை என்பன இடம்பெற்றதுடன் காளியம்மன் ஆலய பிரதம குரு விஸ்வப்பிம்மஸ்ரீ கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, நடனம், வில்லுப்பாட்டு, உழவர் பாடல், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.  

தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பதினொரு வகையான பொங்கல் படைக்கப்பட்டு பூஜை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours