( வி.ரி.சகாதேவராஜா)
விஞ்ஞான
ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 3வது திறன் வகுப்பறைத்
திறப்பு விழா நேற்று ( 18/02/2025) செவ்வாய்க்கிழமை திருக்கோவில்
விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.ஜெயகாந் தலைமையில் வெகு
விமர்சையாக இடம்பெற்றது.
கிராம
புற மாணவ செல்வங்களையும் தொழில்நுட்ப சாதனங்களினூடாக கற்றல் கற்பித்தல்
செயற்பாடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இவ் வேலைத்திட்டம்
விஞ்ஞான ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்
திறன் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர்.திருமதி.மகேஸ்வரி அம்பாள்
குமாரசுவாமி நினைவாக அவரது குடும்பத்தினரால்(அமெரிக்கா) மனித நேயம்
அமைப்பின் ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின்
நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில்
பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் இரா. உதயகுமார் , கௌரவ
அதிதிகளாக மனித நேயம் அமைப்பின் தலைவர் திருமதி. கயிலாசப்பிள்ளை
அம்மையார், மனித நேயம் அமைப்பின் அமெரிக்காவிற்கான பொறுப்பாளர்
தனகே.அரவிந்தன், விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகர்
மற்றும் இணைப்பாளர் வ.யதுர்ஷன், உப தலைவர் ம.திலக்சன், பாடசாலைக்கான EPSI
இணைப்பாளர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், விநாயகபுரம் சித்தி
விநாயகர் ஆலய பிரதமகுரு, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும்
பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்
வருகை தந்திருந்த வலயக்கல்வி பணிப்பாளர், மனித நேயம் அமைப்பின் தலைவர்,
மனித நேயம் அமைப்பின் அமெரிக்காவிற்கான பொறுப்பாளர் மற்றும் விஞ்ஞான
ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி
கெளரவிக்கப்பட்டதுடன் மனித நேயம் அமைப்பின் இச் சேவையை பாராட்டி ஒரு
நினைவுச் சின்னமும் மற்றும் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் இச்
சேவையை பாராட்டி ஒரு Together சின்னமும் பாடசாலை சமூகத்தினால் வழங்கி
வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours