(வி.ரி.சகாதேவராஜா)

396 போட்டியாளர்கள் பங்குபற்றிய  மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில் இப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளில் ஒன்றான மரதன் ஓட்டம் பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.எஸ்.இ.றெஜினோல்ட் FSC  தலைமையில் நேற்று முன்தினம் (8)இடம் பெற்றது. 

குறித்த நிகழ்வில் அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர்  க.லிங்கேஸ்வரன்,  சமபத் வங்கியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம முகாமையாளர் நிதர்சன் டேவிட் ஆகியோர் கலந்து சிறப்பித்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர் .

 மரதன் ஓட்டப் போட்டியில் 162 பெண் மாணவர்களும் 234 ஆண் மாணவர்களும் பங்கேற்றனர். 

குறித்த நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்கிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கும், கல்முனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி, வீதிப்போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும், பாடசாலையின் Jubilee குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும், டொல்பின் மற்றும் றோயல் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் வாகன வசதிகளை வழங்கிய சிந்துயன் அவர்களுக்கும் எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள், இல்லங்களுக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றிகளை பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours