நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி துறை விரிவுரையாளர் எம்.எம்.எம். முபஸ்ஸிரின் தனது கலாநிதிப் பட்டப்படிப்பை அவுஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தில் (Griffith University) கணினி விஞ்ஞானத்தின்  "செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligent)" துறையில் நிறைவு செய்துள்ளார். இந்த பட்டத்தை பெற உலக வங்கியின் அனுசரணையில் உயர் கல்வி அமைச்சினால் வளங்கப்பட்ட AHEAD திட்டம் மற்றும் கிரிபித் பல்கலைக்கழகம் போன்றவற்றின் உயர் புலமைப்பரிசில்களை பெற்றிருந்தார் என்பது முக்கியாமான விடயமாகும்.

மருதமுனை எ.எல்.எம். முசம்மில் மற்றும் என்.எம். பௌசியா தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையான இவர் கல்முனை கல்வி வலய மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் பழய மாணவராவார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் கணணி துறையில் விஷேட இளமானி பட்டத்தை பூர்த்தி செய்த முபஸ்ஸிரின், அங்கு போதனா ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றி பின்னர் 2016 ஆம் ஆண்டில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அதே துறையில் முது விஞ்ஞான மானிக் கற்கையினை பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார். இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்திலும் ஒரு வருடமளவில் விரிவுரையாளராக பணி புரிந்தமை குறிப்பிட தக்கதாகும்.

சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறுபட்ட ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்றத்துடன் உலகின் தலை சிறந்த சஞ்சிகைகளில் பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினதும் தனது பீடத்தினதும் உயர்வுக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours