( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீட்டு திட்டத்தில் வாழும் பொதுமக்கள் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வழங்கல் தடைப்பட்டுள்ளது.

அங்குள்ள நீர்ப்பம்பி பழுதடைந்தமையே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் உடனடியாக விரைந்து கல்முனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளரைச் சந்தித்து தற்காலிகமாக பவுசரில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீட்டு திட்டத்தில், 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

 ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலும்,  இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்கள், தற்போது நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடைப்பட்ட நிலையில், மிகவும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இதற்கான காரணங்களை அறிந்து நிரந்தர தீர்வு ஒன்றை தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்டவர்களை கேட்கின்றனர்.

எமது குறைபாடுகள், அசௌரியங்களை எடுத்துக்காட்ட தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிகை நிருபர்கள், youtube சேனல் நிருபர்கள் அனைவரையும் வருமாறும், உண்மை நிலையை உலகிற்கு உணர்த்துமாறும் கேட்கின்றனர் பாதிக்கப்பட்ட  மக்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours