(க.விஜயரெத்தினம்)

கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்
,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்,களுவாஞ்சிகுடி விசேட அதிகரடிப்படையினரின் பங்குபற்றுதலுடன் செட்டிபாளையம் கடற்கரை பிரதேசம் சிரமதானப் பணியூடாக சுத்தம் செய்யப்பட்டது.


களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இந்த சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்" எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இச்சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது பொதுமக்களால் வீசப்பட்ட பெருமளவான பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச சபையினால் அப்புறப்படுத்தப்பட்டது.


இச்சிரமதான நிகழ்வில் இராணுவ வீரர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours