காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 158ஆம் ஆண்டு நிறைவு விழாவும் மெளலவி - ஆலிம் மஹ்ழரி, ஹாஃபிழ் பட்டமளிப்பு விழாவும் (06) காயல்பட்டணம் மஹ்ழரா வளாகத்தில் இடம்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்ற காயல்பட்டணத்தைச் சேர்ந்த
கே.ராசிக் முஸ்ஸம்மில் அவர்களின் மகன் ஆர்.எம்.அஹமது நவாஸ் ஹாஃபிழ் பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
கேரளா, கோடம்புழா, தாருல் மஆரிஃப் ஷரீஅத் கல்லூரியின் ஸ்தாபகர், மௌலானா, மௌலவி. அல்ஹாஜ் அஷ்ஷெய்க் கலமுல் இஸ்லாம். அப்துர்ரஹ்மான் பாவா முஸ்லியார் மற்றும் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் பாக்கவி ஃபாழில் அஹ்ஸனி (M.A.) ஆகியோர் இணைந்து இப்பட்டத்தை வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours