பாறுக் ஷிஹான்நூருல் ஹுதா உமர்

 
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு  புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா மீண்டும் எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடப்பாண்டிற்கான  பொதுக்கூட்டம்  அண்மையில் நடைபெற்ற போது  மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா  தெரிவானார்.மேலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை. அன்வர் ஸியாத்தும்  பொருளாளராக சட்டத்தரணி எம்.எம்.எஃப். ஷாமிலாவும்  உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீலும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா   கிழக்கின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வாதாடும் திறமை கொண்டவர் என்பதுடன் கடந்த காலங்களிலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும்இ பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு சட்டத்தரணிகளின் நலன்சார் விடயங்களிலும்இ சம்மாந்துறை நீதிமன்றம் உருவாகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours