(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்)

ஆரைப்பற்றை நொத்தாரிஸ்  மூத்ததம்பி வித்தியாலயத்திற்கு அண்மித்த சூழலில்  இனந்தெரியாத நபர்களால் வீட்டுக்கழிவுகள்,குப்பைகள் வீசப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.


மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்திற்கு அண்மித்த சூழலில் இவ்வாறு சுமார் இரண்டு வருடங்களாக இனந்தெரியாதவர்களால் இரவுவேளைகளிலும்,பகல்வேளைகளிலும்  சூட்சுமாக கழிவுப்பொருட்களை வீசி விட்டுச்செல்கின்றார்கள்.இதனை பக்கத்தில் இருப்பவர்களும்,தொலைத்தொடர்பு பரிவர்த்தன ஊழியர்களும் ,பிரதேச சபை ஊழியர்களும் கவனத்தில் எடுத்து கூட்டி துப்பரவு செய்வார்கள்.இவ்வாறு தூய்மைப்படுத்திய இடத்தில் துணிச்சலுடன் மீண்டும் வீசி விட்டுச்செல்வார்கள்.


எனவே இவ்விடத்தில் நிரந்தரமாக குப்பைகளை போடுவதை தவிர்ப்பதற்கு ஆரையம்பதி பிரதேச செயலாளர்,பிரதேச சபைச்செயலாளர்,பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பிரதேச பொதுமக்கள்,பாடசாலை சமூகம் கோரிக்கை விடுக்கின்றார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours