எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஏத்தாளைக்குளத்தில் கடந்த வருடத்தை போல் இம்முறையும் பல்வகைப்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்திருப்பதை காண முடிகின்றது.

 இப்பறவைகள் சரணாலயத்தில் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்காக ஜனவரி மாதத்தில் வந்து தஞ்சமடையும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அடைகாத்து குஞ்சுகள் பெரிதாக வளர்ந்த உடன் மீண்டும் வெளிநாடுகளை நோக்கி தனது குஞ்சுகளுடன் பயணமாகின்றது.

இந்த ஏத்தாளைக்குளத்தில் இப்பறவைகளுக்கு வாழக்கூடிய பிரத்தியேக சூழல் இருப்பதே இதற்கான காரணம் என கருதப்படுகின்றது. மேலும் இப்பறவைகளை காண வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என அதிகளவானோர் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours