நூருல் ஹுதா உமர், எஸ். அஸ்ரப்கான்
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2024 இல் சிறந்த சிறுகதை நூலாக தெரிவு செய்யப்பட்ட கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது எழுதிய தைலாப்பெட்டி நூல் வெளியீடு அறிமுகம் இன்று (08) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய ஏற்பாட்டில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மணிப்புலவர் மருதூர் ஏ மஜீது அரங்கில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதிகளாக சபுத்தி (Sabuddhi) அமைப்பின் தவிசாளர் கலாநிதி. தமீர மஞ்சு, இலங்கை நீதிக்கான மய்யம் தலைவர் சட்ட முதுமாணி சௌபி எச் இஸ்மாயில் ஆகியோருடன் ஓய்வு நிலை அதிபர் திருமதி அ.பேரின்பராஜா, சபத்தி (Sabuddhi) அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி இரோசானி கல்ஹேன ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நூல் தொடர்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை தலைவர் கலாநிதி அபரசிரி விக்கிரமரத்ன, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். அப்துல் ரசாக், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர், சிரேஷ்ட எழுத்தாளர் செங்கதிரோன் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours