( வி.ரி.சகாதேவராஜா)
இறக்காமம் வரிப்பத்தான்சேனை ஷலபி அரபிக் கல்லூரி பல வருடங்களுக்கு பிற்பாடு மீண்டும் நேற்று (5) புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
மீள
ஆரம்பிக்கும் பாரிய நிகழ்வு அரபிக் கல்லூரி தலைவர் அஷ்ஷேக் ஏ. எம் .கியாஸ்
மௌலவி தலைமையில் அறபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்எஸ்எம்.றஷான் நளிமி கலந்து சிறப்பித்தார் .
பிரதான
சிறப்பு பேச்சாளராக மருதமுனை தாருல் ஹுதா முஸ்லிம் மகளிர் கல்லூரி
பணிப்பாளர் அஷ்ஷேக் டாக்டர் எம். எல். முபாரக் மதனி கலந்து கொண்டு
உரையாற்றினார் .
மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
1987 ஆம் ஆண்டு ஷலபி அறபுக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுதிலும் இடை நடுவில் ஒரு தொய்வுநிலை அடைந்திருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours