பாறுக் ஷிஹான்
தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வும் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிப்பும் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ் முகைடீன் தலைமையில் ஊழியர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் .நிஜாம் கௌரவ அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய திட்ட முகாமையாளர் சிரேஸ்ட உதவி பதிவாளர் எம். எச். நபார் , வர்த்தக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் எம். சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours