(அஸ்லம் எஸ்.மெளலானா)
சாய்ந்தமருது மத்ரஸதுல் ஹிதாயா குர்ஆன் பாடசாலையின் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (16) ஹிதாயா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.மத்ரஸதுல் ஹிதாயா அதிபரும் மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசல் பேஷ் இமாமுமான மௌலவி எஸ்.ஏ.எம். ஜினான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மெளலவி ஏ.எல். சாஜித் ஹுஸைன் விஷேட சொற்பொழிவாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அத்துடன் சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எம்.எம். சலீம், அதன் செயலாளர் மௌலவி எச்.எம். நப்றாஸ், மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம். ஜௌபர், செயலாளர் ஏ.ஏ.ஏ. சத்தார், பொருளாளர் அல்ஹாஜ் ஐ.கே. நௌபர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி முழுமையாக ஓதி முடித்த 07 மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் தஜ்வீத், தீனியாத், ஹதீஸ் போன்ற பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
அத்துடன் அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி முழுமையாக ஓதி முடித்த 07 மாணவர்களுக்கான ஒன்றரை வருட கற்கை நெறியும் இதன்போது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கற்கை நெறி தொடர்பான விடயங்களை மத்ரஸா முஅல்லிம் மௌலவி முஹம்மது சமீர் தெளிவுபடுத்தி உரையாற்றினார்.
அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மெளலவி ஏ.எல். சாஜித் ஹுஸைன் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இந்த மத்ரஸாவை மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக கொண்டு நடாத்தும் மௌலவி முஹம்மது சமீர், ஹிதாயா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்
Post A Comment:
0 comments so far,add yours