தி/மூ/இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி மாணவர்கள்  2025.02.07 வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற (சமபோஷா வின் அனுசரணையோடு)  14வயதுக்குகீழ்ப்பட்ட பெண்களுக்கான அகில இலங்கை கால்பந்து போட்டியில் 4ஆவது இடத்தை வென்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பிரபல பாடசாலைகளில் கால்பந்து அணிகள் உட்பட 625 அணிகள் பங்கேற்ற போட்டிகள் பல சுற்றுக்களாக நடைபெற்றது.

நடைபெற்ற இறுதிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு அணிகளில் ஒரு அணியாக இந்துக்கல்லூரி அணியும் இடம்பிடித்திருந்தது.

இதன் அடிப்படையில் இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியின் பெண்கள் கால்பந்து அணி தேசிய ரீதியில் 4வது இடத்தை வெற்றி பெற்றமையானது இப்பாடசாலையைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையாகவவே பார்க்கப்படுகின்து.

 வெற்றியாளர்கள் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் பாடசாலைச் சங்கத்தினரால் பாராட்டி  உற்சாகமாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours