(எம்.எஸ்.எம். ஸாகிர்)



சாய்ந்தமருதில்  தொழிலற்றோருக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "தொழில் சந்தை"  நிகழ்வு நாளை (20) வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் துறையினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த தொழில் சந்தையினூடாக தொழில் தேடுனர்களை இணையத்தில் பதிவு செய்தல், வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல், தொழில் வழங்கும் நிறுவனத்துடன் தொழில் தேடுனர்களை இணைத்தல், தொழில் பயிற்சிநெறிக்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளல், நேர்முகப் பரீட்சை நடத்துதல், தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல், சுயதொழில் ஊக்குவிப்பு சேவை, தொழில் திறவுகோல் சோதனை மூலம் எதிர்கால கனவுகளுக்கு வழிகாட்டல் என்ற சேவைகளும் இந்த தொழில் சந்தை மூலம் தொழிலற்றோர்களுக்கு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தொழிலற்றோர்கள், இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாது பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0760124888, 0760104628 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours