பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அன்னையர் ஆதரவு குழுவினருக்கான கற்றாழை கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(6) இடம்பெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது இயற்கை வேளாண்மை வழிமுறையை பரப்புவதை இலக்காக கொண்டு நடைபெற்றது.
மேலும் இந்தக் கற்றாழைக் கன்றுகளை அன்னையர் ஆதரவு குழு உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் நட்டு பாதுகாக்க வேண்டும் என்பதுடன் கற்றாழை வளர்ப்பு முறைகள், நீர் பாதுகாப்பு மற்றும் உரமளிப்பு தொடர்பான அறிவுரைகளும் Nature farming plantation Pvt அமைப்பின் உறுப்பினர்களால் ஒவ்வொரு அன்னையர் ஆதரவுக் குழுவுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours