சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அமைப்பின் உப காரியாலயமான பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிட தொகுதியில் கடந்த 16.02.2025 அன்று இடம்பெற்றது.

 சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளரும் இலங்கை கிளையின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபருமான க.துரைநாயகம் அவர்களும் மற்றும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்குரிய கணக்கறிக்கைகள் ஆராயப்பட்டதுடன் இவ்வருடத்திற்குரிய செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours