பாறுக் ஷிஹான்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிமின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கான உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு வியாழக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணிஏ.எம். ரகீப்பின் கோரிக்கைக்கு அமைவாக மருதமுனை அல்- மனார் கல்லூரிக்கு 5.2 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு அமைக்கும் ஆரம்ப கட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அதன் இறுதிகட்ட பணிகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பின் நிதி ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்யபட்டன.
குறித்த பூப்பந்தாட்ட விளையாட்டரங்கினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் இஎஸ்.எம்.எம் முஷாரப் ஆகியொர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் ,கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் , கல்லூரியின் அதிபர் , பிரதி அதிபர் , ஆசிரியர் குழாம் , பாடசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் , பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் போன்றோரும் பிரசன்னமாகி இருந்தனர்

Post A Comment:
0 comments so far,add yours