மிக முக்கியமான ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். ஊனமுற்ற மற்றும் விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் முன்னைய பாராளுமன்றத்திலும் 'டிசேபிலிடி ஃபோகஸ்' என்ற விசேட நாடாளுமன்ற குழுவொன்று காணப்பட்டது. முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களின் கீழ் செயற்பட்ட இக்குழுவின் ஊடாக பாரிய பணியாற்றப்பட்டது. அந்த 'டிசேபிலிடி ஃபோகஸ்' ஊடாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கிய இதனை முன்னெடுத்துச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
நேற்றைய தின பாராளுமன்ற இரண்டாவது வரவு செலவு திட்ட உரையின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக எனக்கு முன்னதாக உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் குறிப்பிட்டார். அந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை பிரதி நிதி அமைச்சர் இங்கு இருப்பதால் நான் அறிந்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், வரவு செலவு திட்டத்தில் அவ்வாறானதொரு அதிகரிப்பை நான் அவதானிக்கவில்லை.

பதில் - ஊனமுற்ற நபர்களுக்காக தற்போது மாதாந்தம் வழங்கப்படும் ரூபாய் 7500 இனை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக நாம் எமது வரவு செலவு திட்ட உரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அதாவது ஏப்ரல் மாதம் முதல் அந்த கொடுப்பனவு அதிகரிப்பு அமுல்படுத்தப்படுகிறதா.

பதில் - ஆம். அதனை எமது வரவு செலவு திட்ட உரையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

நான் ஒருவேளை அவ்விடயத்தை தவறவிட்டிருக்கலாம். கொடுப்பனவை ரூபாய் 7500 இனை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது சிறந்த விடயம். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார மேடைகளில், இதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களில் கண்டிராத வகையில் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு ஊனமுற்றோர் மற்றும் விசேட தேவை உடையோரின் மீட்பாளர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் கூறியதை போன்றே முதல் முறையாக தேசிய பட்டியல் ஊடாக அவ்வாறு ஒரு கௌரவ உறுப்பினரை கொண்டு வந்துள்ளனர். அதனை உண்மையில் பாராட்ட வேண்டும்.

நான் வரவு செலவு திட்டம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி இருந்தேன். ஆனால் அவை எதற்கும் எவ்வித பதில்களும் அளிக்கப்பட்டு இருக்கவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது சாதாரண மக்களுக்கான அரசாங்கம் என்றே குறிப்பிடப்பட்டது. பாரிய அளவிலான, கோடிக் கணக்கில் இலாபம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் வணிகங்களுக்கு முன்னைய அரசாங்கத்தில் 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழிலதிபர்களுக்கு ஏன் 966 பில்லியன் ரூபாயை கொடுக்க வேண்டும்? இந்த பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு யார் வரி நிவாரணம் வழங்க கோரியது? இது முன்னைய அரசாங்கத்தில் வழங்கப்பட்டது எனக் நீங்கள் கூறலாம். ஆனால் அதற்கு தான் உங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானங்களை மாற்றி அமையுங்கள். இன்றும் நிறைவேற்று அதிகாரம் வலுவான நிலையில் காணப்படுகிறது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி இருக்கிறார். இந்த 966 பில்லியன் வரி நிவாரணங்கள் இரத்து செய்யப்பட்டதாக வரவு செலவு திட்டத்தில் எங்கும் இல்லை.

அவ்வாறாயின் சாதாரண மக்களின் சம்பளத்திற்கும் வரி அறவிடுகின்றனர். வெட் அறவிடுகின்றனர். கார்களுக்கு வரி அறவிடுகின்றனர். ஆனால் இந்த பணத்தை சேமித்திருந்தால் நான் முறை அஸ்வெசும கொடுப்பனவை வழங்கி இருக்கலாம். பாரிய அளவிலான தொழிலதிபர்கள், வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடு இந்த அரசாங்கத்திலும் தொடர்ந்து வருகிறது. இவர்களிடமிருந்து அப்பணத்தை அறவிட்டு 10 ஆயிரமாக அறிவிக்கப்பட்ட கொடுப்பனவை ஏன் 20 ஆயிரமாக அதிகரிக்க முடியாது? சிகரெட்டிற்கு குறைவாக வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அவர்களுக்கு வரி விதித்து இதனை வழங்கியிருக்கலாம்.
மறைந்த எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களை இந்த பாராளுமன்றத்தில் முன் வரிசைக்கு அழைத்து வர நாம் மிகவும் கஷ்டப்பட்டோம். ஏனெனில், பாராளுமன்றத்திற்கு உள்ளேயேனும் அங்கவீனம் உடையோருக்கு உரிய வசதிகள் இல்லை. இதற்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருந்த காலப்பகுதியில் பிரதரை சக்கர நாங்காலியில் அழைத்து வந்து பின்வரிசை ஆசனத்திலேயே அமரச் செய்தார்களாம்.

தற்போது சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளமை சிறந்த விடயம். அதில் பழைய விடயங்களையும் உள்ளடக்குங்கள். பிறரிடமும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். அதேவேளை இந்த மக்கள் மற்றுமொரு வரவு செலவு திட்டம் கொண்டு வரப்படும் வரை இன்னும் ஒரு வருடத்திற்கு காத்திருக்க வேண்டும்.

மிக முக்கியமாக உங்களுடைய இந்த விசேட தேவைகளை உடையோருக்கான சட்டமூலம் அல்லது கொள்கையை கொண்டு வருவது பற்றி கூறி இருக்கின்றீர்கள். இதிலே பிறப்பிலேயே விசேட தேவையுடையோராக காணப்படுபவர்கள் அன்றி நடைபெற்ற போரினால் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்ட வடக்கு கிழக்கை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் காணப்படுகின்றர். உதாரணமாக கூறினால் மட்டக்களப்பிலே 8 ஆயிரத்து 310 பேர் அங்கவீனமானவர்களாக காணப்படுவதாக பட்டியல் காணப்படுகிறது. ஆனால் இந்த வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 7 ஆயிரத்து 750 பேருக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. இதையும் தாண்டி வடக்கு கிழக்கிலே போரினால் ஊனமடைந்தவர்கள் ஆயிரக் கணக்கானோர் இருக்கின்றனர். அதனால் பிறப்பிலேயே ஊனமுற்றவர்கள் அல்லாத கடந்த காலத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களை பற்றியும் சிந்தித்து இந்த நீங்கள் முன்னெடுக்கின்ற தீர்மானங்களுக்குள் உள்வாங்க வேண்டும் என்பதே என்னுடை வேண்டுகோள். அவர்களுக்காக குரல் எழுப்புவதற்கு நாங்கள் மாத்திரமே இருக்கின்றோம். ஏனெனில் வடக்கு கிழக்கிலே அதிகாரம் உள்ள வகையான ஒரு மாகாண சபை இயங்குமாக இருப்பின், நாங்களே எங்களுக்கான சட்டங்களை இயக்கி எமது மக்களை பாதுகாக்கலாம். எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கலாம். ஆனால் அதனை பறித்து வைத்து இருக்கிறீர்கள். தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே எங்களை ஆளக் கூடிய வகையிலான ஆட்சி முறை இல்லாமையினால் சில விடயங்கள் செய்ய முடியாது. அந்தவகையில் இந்த கூறிய விடயங்கள் தொடர்பில் கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். அத்துடன் சபைக்கு இந்த ஒத்திவைக்கும் பிரேரணையை கொண்டு வந்த உறுப்பினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours