பாறுக் ஷிஹான்


உழவு இயந்திரத்தில் ஏற்றி  செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து  விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி   தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் பகுதியளவில் சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வேளாண்மை அறுவடை காலம் ஆகையினால் அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் உழவு இயந்திரங்கள் மற்றும் இதர வாகனங்களில்  ஏற்றப்பட்டு கொண்டு வரப்படுகின்றன.
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours