(அஸ்லம் எஸ்.மெளலானா)
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாகவும் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் கல்முனை வலயக் கல்வி பணிமனை ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம், சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.
இதன்போது 2024- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் கருப்பொருளில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பொது நூலகங்களினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் நூலகங்களை சிறந்த முறையில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்ற சிரேஷ்ட வாசகர்கள் பலருக்கு இதன்போது விருதுகள் வழங்கபட்டு, கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை பொது நூலகத்தினால் தொகுக்கப்பட்ட சிறப்பு மலர் ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலகர் எஸ்.எம்.ஆர். அமீனுத்தீன் இதனை அறிமுகம் செய்து வைத்ததுடன் மாநகர ஆணையாளரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் ஏ. சி. ஹரீஷா சமீம் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் நூலக செயற்பாட்டாளர்களான ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவப்பிரகாசம், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எஸ். சிராஜுதீன், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.ஏ. கபூர் உட்பட பல பிரமுகர்களும் பொறுப்பாசிரியர்களும் சாய்ந்தமருது நூலகர் ஏ.எச். தௌபீக் உள்ளிட்ட நூலக சேவகர்களும் பங்கேற்றிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours