( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு திருப்பணி வேலைகள் மீண்டும் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அடித்தளம் இட்டு இதுவரை காலமும் முற்றுப் பெறாத நிலையில் 33 அடி உயரத்தில் காணப்பட்டது.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அடுத்த கட்ட திருப்பணியை ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் அண்மையில் கூட்டம் கூடி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருந்தனர்.

அதன் முதற் கட்டமாக நாடறிந்த சமூக செயற்பாட்டாளர் பரோபகாரி முன்னாள் கல்முனை லயன்ஸ் கழகத் தலைவர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் முதலிரு தளங்களை அமைக்க முன்வந்து அதற்கான திருப்பணி வேலைகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தார்.
அதற்கான சாரங்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours