சா.நடனசபேசன்

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, மத்திய முகாம் பாடசாலை அதிபர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச  சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட மத்தியமுகாம் பிரதேசத்தில் நாவிதன்வெளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில்  புனரமைக்கப்பட்ட மத்திய முகாம் பொதுச் சந்தையானது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை இடம்பெற்றது.

 நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் திரு.பா.சதீஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம்.முஜீப் பிரதம அதிதியாகவும் மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெளரவ அதிதியாகவும்  கலந்து சிறப்பித்ததுடன் மத்திய முகாம் பொதுச் சந்தையை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாவிதன்வெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் வர்த்தக சங்க பிரதிநிதிகள் வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours