(ஜெஸ்மி எம்.மூஸா)
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவன் எஸ்.குகேஸ் 2 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்.
தேசிய மட்டத்தில் 3ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டதன் மூலம் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது
கல்முனை வலயத்தில் நற்பிட்டிமுளை லாபீர் வித்தியாலய மாணவன் எச்.அப்றி அஹமட் 4ஆம் இடத்தினையும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவன் கே.சாஹானுஜன் 5ஆம் இடத்தினையும், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி எம்.வலீத் பாத்திமா சுமைய்யா 6ஆம் இடத்தினையும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவன் ஏ.எச். அதில் 7ஆம் இடத்தினையும் காரைதீவு ஆர்.கே.எம். மகளிர் வித்தியாலய மாணவி பி.சபித்தா பங்கேற்புச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் சஹூதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours