எஸ்.சபேசன்
கல்முனை வடக்குப் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலை மற்றும் அவ்விடத்தில் இருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் இருக்கும் பெரியநீலாவணை பழைய மதுபானசாலை இரண்டினையும்அகற்றக் கோரி அப்பகுதி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் சவப்பெட்டியினை ஏந்தியவாறும் பறைமேளத்துடனும் மக்களின் பாரிய போராட்டம் 16 ஆம்திகதி ஞயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கல்முனை பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க ப்பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் இன்று பெரியநீலாவணையில் அமைந்துள்ள பழைய மதுபானசாலையினையும் அகற்றக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் பழைய மதுபானசாலைக்குமுன்னால் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக புதி மதுபானசாலை வரை சென்று ஆர்ப்பட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியநீலாவணையில் பழைய ஒரு மதுபான சாலை இயங்கி வருகிறது.அதேவேளை கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் புதிய மதுபான சாலை 11 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள பழைய புதிய மதுபானசாலைகள் இரண்டினையும் அகற்றப்படவேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிலையில் தமிழ்அரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அம்பாரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்தபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருசில குழுக்கள் மக்கள்போராட்டத்தில் அரசியல் தேவையில்லை எனத்தெரிவித்தனர் அதனால் அவர்கள் ஆர்பாட்டக்குழுக்களுடன் பேசியதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இடைக்காலத் தடைஉத்தரவினைப் பெற்றுத்தருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார்கள். ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் பொலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours