(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில்
எதிர்வரும் புதன்கிழமை(26) மகா சிவராத்திரி நடைபெறவுள்ளது.
அதற்கான
ஏற்பாட்டுகளுக்கான நிருவாக சபை கூட்டம் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய
பரிபாலன சபை தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆலய
பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா சிவராத்திரி மற்றும் சிவனாலய புதிய
கட்டுமானம் மற்றும் சிறப்பு மலர் பற்றி விளக்கமளித்தார்.
வழமைபோல் நான்கு சாமப் பூஜைகளுடன் சிறப்பாக நடாத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.
மலர்க் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours