நூருல் ஹுதா உமர்



ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எம்.டி ஹசன் அலி விலகியுள்ளார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் பஷீர் சேகு தாவூத்துக்கும் அவர் புதன்கிழமை (05) கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் எனது உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதை, உடனடியாக அமுலுக்கு வருவதை முறையாக அறிவிக்கின்றேன்.
இல.30, கடற்கரை வீதி, கல்கிஸ்ஸையில் உள்ள எனது இல்லத்தில் இயங்கிவரும் கட்சி அலுவலகமும் இனி இயங்காது.

கட்சியில் தனது பதவிக் காலம் முழுவதும் எனக்கு அளித்த அனைத்து ஒத்துழைப்பு களுக்கும் கட்சி ஆதரவாளர்கள், தலைமைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற நலன் விரும்பிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளராக நான் மூன்று தசாப்தங்களாக பதவி வகித்துள்ள நிலையில், உங்களுக்கும் தேர்தல் செயலக ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நியாயமான மற்றும் நேர்மையான அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வயது மூப்பு, உடல்நிலை என்பவற்றை காரணமாக கொண்டே இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours