நூருல் ஹுதா உமர்

Clean SriLanka வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினை தூய்மைப்படுத்தும் வேலை திட்டம்  இன்று (07) இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜரீன் உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன்போது அலுவலக வளாகம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்ட துடன் அலுவலக பின்புற பகுதியில் நிலையான சுகாதாரம் மற்றும் சுத்தம் உறுதி செய்யப்பட்டது. மேலும்  அலுவலக சுவரிலிருந்து  கழற்றப்பட பழைய பெயர் பலகை  மீண்டும் புதுப் பொலிவுடன்  அலுவலக (வடக்குப்பகுதி) மதிலில் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours